AI தொழில்நுட்பம் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் காவல்துறையும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத பிணத்தை கண்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த பத்தாம் தேதி முகம் முழுவதும் சிதைந்த ஒரு இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த இளைஞர் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை. இதனை அடுத்து AI தொழில்நுட்ப மூலம் கொலை செய்யப்பட்டவரின் முகத்தை மறு கட்டமைத்த காவல்துறை அந்த புகைப்படத்தை சுவரொட்டிகளாக டெல்லி முழுவதும் ஒட்டியது.
இதனை அடுத்து சமூக வலைதளங்களிலும் அந்த முகத்தை வைத்து தேடப்பட்டது. இந்த நிலையில் காவல்துறையினரின் போஸ்டரை பார்த்த ஒருவர் புகைப்படத்தில் உள்ளவர் தனது சகோதரர் என்றும் அவரை சில நாட்களாக காணவில்லை என்றும் தெரிவித்தார்
இதனை அடுத்து அவர் குறித்து மேலும் விசாரணை செய்தபோது அவருடைய எதிரிகள் தான் அவரை கழுத்தை நிறுத்தி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் ஒரு பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளது
AI தொழில்நுட்பம் மூலம் முகத்தை கண்டுபிடித்ததால் தான், குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்