புகழ்பெற்ற பாடகி பிரபா ஆத்ரே (92) இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் புகழ்பெற்ற “கிரானா கரானா” இசை பள்ளியைச் சேர்ந்த இவர், இந்திய அரசின் உயரிய விருதான மூன்று பத்ம விருதுகளையும் பெற்றுள்ளார்.
1932இல் பிறந்த ஆத்ரே, இசை கற்றுக்கொள்ள மறுக்கப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்து, இசைத்துறைக்குள் நுழைந்தவர். பன்முக ஆளுமை கொண்ட இவர் இசையில் மட்டுமல்லாமல் அறிவியல், சட்டம் போன்றவற்றிலும் பட்டம் பெற்றுள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இரண்டாவது உயரிய விருதான பத்மாஸ் பூஷன் விருதை பெற்றார்.
இந்நிலையில் பாடகி பிரபா ஆத்ரே புனேவில் உள்ள அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.