தொடர்ந்து 16 நாட்களாக சிகிச்சையில் இருக்கும் பிரனாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாடுகள் மேலும் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான பிரனாப் முகர்ஜி, மூளையில் உள்ள ரத்தக்கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. அதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து வெண்ட்டிலேட்டர் உதவியுடனேயே இருந்தார்.
கிட்டதட்ட 16 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என சொல்லப்பட்ட நிலையில் இப்போது அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவரது சிறுநீரக செயல்பாடுகள் மேலும் குறைந்துள்ளதாகவும் தொடர் கோமா நிலையிலேயே அவர் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது.