இன்று காந்தி ஜெயந்தி தினத்தில், பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவரது கட்சி சாதிக்குமா என்பதனை பொறுத்து மட்டுமே பார்க்க வேண்டும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் வியூகம் நிபுணர் பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அக்டோபர் இரண்டாம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதன்பின், "ஜன் சூராத்" கட்சி என்ற பெயரில் இன்று அவர் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
2025ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கட்சி தொடங்கிய முதல் நாளில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளோம் எனவும், இது பீகார் மாநில அரசியலில் புதிய வரலாறு படைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.
எந்த ஒரு குறிப்பிட்ட சாதி, மதம், குடும்பம் அல்லது சமூகத்துக்குள் தனது கட்சி நின்று விடாது என்றும், இது பீகார் மக்களின் கட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். எனவே, அவரது கட்சி சாதனை செய்யுமா என்பதை பொறுத்து மட்டுமே பார்க்க வேண்டும்.