உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்பவே பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிவேகமாக உயர்ந்துள்ளது என்றார்.
அதேபோன்று வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளது என்றும் ஆனால், பிரதமர் மற்றும் பாஜக தலைவர்கள் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை என்றும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினர்.
பாஜகவினர் வளர்ச்சியைப் பற்றி பேச மாட்டார்கள். என்றும் மாறாக, பாஜக தலைவர்கள் மக்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத பிரச்சினைகளை கொண்டு வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அதாவது, உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே அவர்கள் பேசி வருகிறார்கள் என்று பிரியங்கா காந்தி விமர்சித்தார். இந்த மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.