எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
நாட்டின் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த வருடத்தின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று வானொலிகளில் ஒளிபரப்பானது. அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
பிறகு பேசிய அவர் ”25 ஆண்டு காலமாக புரு ரியாங் அகதிகள் பிரச்சினை டெல்லி ஒப்பந்தம் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களது மறு குடியமர்வுக்காக மத்திய அரசு 600 கோடி செலவளிக்க உள்ளது.
வன்முறை பாதையை நோக்கி திரும்பியவர்கள் அமைதி மீது நம்பிக்கை வைத்து நாட்டின் முன்னேற்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அமைதி பேச்சுவார்த்தை மூலம் பல சுமூக தீர்வுகள் கிடைத்துள்ளன. ஆகவே வன்முறை எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது. வன்முறையையும், ஆயுதங்களையும் வீசி எறிந்துவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள வாருங்கள்” என பேசியுள்ளார்.