ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சிஎம் வேட்பாளரை மோடியால் கண்டுபிடிக்க முடியவில்லை என பிரச்சாரம் செய்த காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார்.
அப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சிதறி விட்டதாகவும் ஒரு முதலமைச்சர் வேட்பாளரை கூட மோடியால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார். மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று முதலமைச்சர் வேட்பாளரை அவர் தேடி வருவது போல் தெரிகிறது என்றும் அவர் கிண்டல் அடித்தார்.
மேலும் அரசியல் உணர்வுகளையும் மதத்தையும் பயன்படுத்தினால் அவர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பண வீக்கம் காரணமாக விவசாயிகள் உட்பட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்