Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் கைது.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் கைது.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!
, திங்கள், 10 ஜூலை 2023 (09:04 IST)
சொத்துக்கு வாய்ப்பு வழக்கில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வருமானத்தை விட 176 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சோனி என்பவர் மீது அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. 
 
இந்த வழக்கில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை துணை முதலமைச்சராகவும் அமைச்சராகவும் இருந்த ஓம் பிரகாஷ் சோனி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவரது வருமானம் தேர்தலுக்கு முன் ரூ.4.52 கோடியாக இருந்த நிலையில் ஒரு சில மாதங்களில் ரூ.12.42 கோடியாக உயர்ந்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர் 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வட மாநிலங்களை மிரட்டும் பேய் மழை! ஒரே நாளில் 34 பேர் பலி!