ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன் என்று கூறினீர்களே, எங்கே வேலை? என ராகுல் காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்
ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று பிரதமர் மோடி கூறினார். அந்த வேலைகள் எங்கே போனது? மாறாக கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையை இழந்து உள்ளனர் என கர்நாடக மாநில தேசிய ஒற்றுமை பயணத்தின்போது ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்
மேலும் இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. கர்நாடகாவில் 2.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன? போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேண்டுமானால் ₹80 லட்சம் செலுத்தி ஒருவர் ஆகலாம். காசு இருந்தால் கர்நாடகாவில் அரசு வேலை வாங்கலாம், இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் வேலையில்லாமல் இருக்கலாம்" என ராகுல் காந்தி பேசினார்.