காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அந்த தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் போட்டியிடுவதால் வெற்றி நிச்சயம் இல்லை என்பதால் வேறொரு தொகுதியில் அதாவது அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான வீடு புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் ராகுல் காந்தி அங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் அந்த தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பதும் வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த முறை வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக ராகுல் காந்திக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களே ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்வது வருவதால் ராகுல் காந்தியின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தான் அமேதியில் அவர் போட்டியிட போவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கேரளாவில் தேர்தல் முடிவு அடைந்ததும் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.