நாடாளுமன்ற கூட்டத்தில் அதானி மோசடி விவகாரத்தை பற்றி பேசுவதை தடுக்க பிரதமர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த கூட்டத்தொடரின்போது அதானி பங்குசந்தை மோசடி குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அதானி விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி “நான் பல ஆண்டுகளாக மத்திய அரசு பற்றியும், தொழில் அதிபர்களுடனான நெருக்கம் பற்றியும் கூறி வருகிறேன். அதானி விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்.
ஆனால் மத்திய அரசு விவாதம் நடத்த விரும்பாமல் அதை கண்டு பயப்படுகிறது. விவாதம் நடப்பதை தவிர்க்க தன்னா இயன்றதை எல்லாம் பிரதமர் மோடி செய்வார். கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வெளியே வர வேண்டும். அதானிக்கு பின்னால் உள்ள சக்தி யார் என நாடு தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.