மின்னணு வாக்கு எந்திரத்தின் பயன்பாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும் என எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் ஆணையம் முறையாக செயல்படாததால் நமது ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுகிறது.
தேர்தல் நடைமுறையில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காததால் மோசடி மூலம் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டப்படும் ஆபத்து உள்ளது என ராகுல் காந்தி எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யப்படும் ஆபத்து அதிகமாக இருப்பதால் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டிற்கு முடிவு கட்ட வேண்டும் என எலான்மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் நேற்று பதிவு செய்திருந்தார்.
மும்பையில் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். எலான் மஸ்க் அவர்களின் இந்த கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு முடிவு கட்டப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.