ராகுல் காந்தியின் எம் பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அரசு பங்களாவை அவர் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ்க்கு ராகுல் காந்தி கூறிய பதில் தற்போது வெளிவந்துள்ளது.
ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அதில் கடந்த நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான நான் இங்கே கழித்த மகிழ்ச்சியான நினைவுகளுக்காக என்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய உரிமைக்கு எந்தவிதமான பாதகமும் இன்றி உங்கள் கடிதத்தில் உள்ள விஷயங்களுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் அரசு பங்களாவை காலி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு அரசு பங்களாவை காலி செய்ய ஏப்ரல் 23ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது