உத்தரப்பிரதேசத்தில் பழுதடைந்து நின்ற ரயிலை ரயில்வே பணியாளர்கள் சில தூரம் தள்ளிச் சென்ற சம்பவத்தின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சாலையில் பேருந்து நடுவழியில் நின்றுவிட்டால், பயணிகள் கீழிறங்கி பேருந்தை ஓரம் தள்ளிச் செல்வதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு கார், சில நபர்கள் சேர்ந்து தள்ள முடியும், பெரிய பஸ்களை கூட பத்து, இருபது பேர் சேர்ந்து தள்ளி நகர்த்திய சம்பவங்கள் நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் ஒரு ரயிலைத் தள்ளிச் செல்வதை யாரும் பார்த்திருக்கிறீர்களா? இதுபோன்ற ஒரு நிகழ்வு உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. பிஜ்நோர் பகுதியில் பழுதடைந்து நின்ற பராமரிப்பு ரயிலை ரயில்வே ஊழியர்கள் சில தூரம் தள்ளிச் சென்றனர். இதற்கான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதுபோன்ற இன்னொரு சம்பவம் கடந்த மார்ச் மாதம் உத்தரப்பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது, அப்போது பழுதடைந்து நின்ற ரயிலை ஊழியர்கள் மெயின் லைனிலிருந்து லூப் லைனுக்கு தள்ளிச் சென்றனர்.