ராமாயண காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படும் ராமர் சேது பாலம் மிகப் பெரிய ஆச்சரியத்துக்கு உரிய ஒன்றாக உள்ளது. இந்தப் பாலம் குறித்து பலர் கேலியும் கிண்டலும் செய்து உள்ளனர் என்றாலும் ராமாயண காலத்திலிருந்து தொன்றுதொட்டு இந்த பாலம் இருந்துள்ளது என்பதற்கு சாட்டிலைட் புகைப்படங்களை சாட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் சிவில் இன்ஜினியரிங் பொறியியல் பாடத்தில் ராமாயண பகுதிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தின் உயர்கல்வித் துறை அமைச்சர் மோகன் யாதவ் இதுகுறித்து கூறிய போது ராமாயணத்தில் வரும் ராமர் பாலம் உள்ளிட்டவை குறித்து தற்போதைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ராமாயண பகுதிகளில் சிவில் இன்ஜினியரிங் பொறியியல் பாடத்தில் இணைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்
உலகமே அதிசயிக்கும் ராமாயண காலத்து ராமர்சேது பாலத்தை மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள மாணவர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது