ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு, கனிமொழியின் 2G வழக்கு உள்பட பல வழக்குகளில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி இன்றி திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய 94 வயது ராம்ஜெத்மலானி பேசியதாவது:
வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெறுவது என முடிவு செய்துள்ளேன். 70 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளேன். உயிருடன் இருக்கும் வரை புதிய பணியில் ஈடுபடுவேன். ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுவேன். முந்தைய மத்திய அரசும், தற்போது உள்ள மத்திய அரசும் நாட்டை மிகவும் இக்கட்டான நிலைக்கு செல்ல வைத்து விட்டன. இந்த பேரழிவில் இருந்து நாட்டை காப்பாற்றுவது வழக்கறிஞர்கள் மற்றும் குடிமகன்களின் கடமை. எனவே வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடவுள்ளேன்' என்று குறிப்பிட்டார். ராம்ஜெத்மலானியின் இந்த கருத்தால் அரசியல்வாதிகள் அச்சம் அடைந்துள்ளனர்.