இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி கணக்கில் கடன் பெற்றிருந்த செல்வந்தர்களின் கடன் கணக்குகள் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வங்கிகளில் கோடி கணக்கில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் தப்பியோடியதாக விஜய் மல்லையா அறியப்படுகிறார். உவரை போலவே பல்வேறு பணக்காரர்கல், நிறுவன தலைவர் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருந்து வருகின்றனர். கடன் வாங்கி திரும்ப செலுத்தாத முன்னணி தொழில் நிறுவனங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தன்னார்வலர் ஒருவர் கோரியிருந்தார்.
அந்த தகவலின்படி விஜய் மல்லையா தனது விமான நிறுவனம் மீது பெற்ற ரூ.1,943 கோடி, வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் மீது வாங்கப்பட்ட ரூ.5,492 கோடி கடன் உள்பட மொத்தம் 50 இந்திய செல்வந்தர்களின் வங்கி கடன் தொகையான ரூ.68,607 கோடி கடன் கணக்கு நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து மத்திய அரசு பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுவது இதன் மூலம் தெரிய வந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து இணைய வாசிகள் பலரும் இதுகுறித்த கிண்டல் பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் கணக்கியல்ரீதியான் கடனை நீக்குவது என்பது முழுவதுமாக கடனை நீக்குவது ஆகாது என்றும், கணக்கில் நீக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து கடன் தொகையை பெற சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.