தேசத்திற்கு எதிரான எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளதாக பிரதமர் மோடியை சந்தித்த முப்படைத் தளபதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலையில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்ற இந்திய விமானப்படை காஷ்மீர் ஆக்கிரமிப்பில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகளை குண்டுவீசி அழித்தனர்.
இதனையடுத்து அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் நேற்று இந்திய விமானப்படைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதனையடுத்து நேற்று காலை பாதுக்காப்புக்கான மத்திய அமைச்சரவைக்குழு கூட்டன் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. மேலும் குடியரசு தலைவர் துணைக்குடியரசு தலைவர் ஆகியோரைச் சந்தித்த பிரதமர் இந்த தாக்குதல் குறித்து விளக்கினார்.
அதன்பின்னர் நாட்டின் பாதுகாப்பு குறித்து முப்படைத் தளபதிகளுடன் மோடி ஆலோசித்தார். நாம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் நம்மை தாக்கக்கூடும் என்பதால் முப்படை தளபதிகளையும் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார். இதற்கு பதிலளித்த முப்படைத் தளபதிகளும் ’எந்த சவாலையும் எதிர்கொள்ள தாயார்’ என்று அவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகிறது.