இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த மென்பொறியாளர் ரசிலா. இந்நிலையில், தான் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலகத்துக்குள்ளேயே கம்ப்யூட்டர் ஒயரால் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ரசிலா 5 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது.
அப்போது அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த அசாமைச் சேர்ந்த காவலர் பபென் செயில்சியா (26) மற்றொரு பாதுகாவலர் பணிக்கு வந்ததும், மாலை 6.30 மணியளவில் பணி முடிந்து, வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து கிளம்பியுள்ளார்.
ரசிலா கொலை செய்யப்பட்டது இரவு 8 மணியளவில் தான் தெரிய வந்தது. அதன்பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தி, அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அலுவலகத்துக்குள் பபென் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காவல் துறையினர் பபென் இருப்பிடத்திற்கு செல்வதற்குள் அவன் புனேவை விட்டு தப்பிவிட்டார். உடனடியாக காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு, அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை தொடர்ந்து சென்று கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் பபென் ரசிலாவை அடிக்கடி சந்தேகத்திற்கிடமான முறையில் பார்த்து வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ரசிலா அவரை கண்டித்ததுடன் இது குறித்து மேலதிகாரியிடம் சொல்கிறேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து நேற்று முந்தினம் அலுவலகத்தில் பணியாற்றிகொண்டிருந்த ரசிலாவிடம் வந்த பபென் இது குறித்து மேலதிகாரியிடம் எதுவும் கூறவேண்டாம் என்று கேட்டுள்ளார். ஆனால் அதனி ஏற்காத ரசிலா அங்கிருந்து மேஜேனர் அறைக்கு செல்ல முயன்றுள்ளார். இதனால் கோபம் அடைந்த பபென் ரசிலாவின் கலுத்தில் வயரை கழுத்தில் இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது தெரியவந்தது.
தற்போது அவரை வருகிற 4ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.