டெல்லியில் மது அருந்துவதற்கான வயது வரம்பு இதுவரை 25 ஆக இருந்த நிலையில் தற்போது 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது
மது பழக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக மது அருந்துவதற்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு தற்போது மது அருந்துவதற்கான வயது வரம்பை 25ல் இருந்து 21 ஆக குறைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் இனி புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்
டெல்லியில் மது அருந்துவதற்கான வயது வரம்பு 25 லிருந்து 21 ஆக குறைக்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இளைஞர்கள் பலர் ஏற்கனவே மதுவால் சீரழிந்து வரும் நிலையில் இந்த வயது குறைப்பு அவர்களை மேலும் மதுவுக்கு அடிமையாக செய்யும் வகையில் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து இந்த வயதுவரம்பு குறைப்பை வாபஸ் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்