Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காஷ்மீருக்குள் நுழையும் முதல் கார்ப்ரேட் ரிலையன்ஸ்: எப்படி சாத்தியமானது?

காஷ்மீருக்குள் நுழையும் முதல் கார்ப்ரேட் ரிலையன்ஸ்: எப்படி சாத்தியமானது?
, திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (14:01 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி காஷ்மீரில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். 
 
ரிலையன்ஸ் குழும வருடாந்திர மாநாடு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு சில எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிட்டார். 
 
அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்து அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீரில் நிறுவனங்கள் துவங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். 
webdunia
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் இப்போது அங்கு நிலம் வாங்குவது கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களது தொழிலை துவங்குவது எளிமையாகி உள்ளது. 
 
எனவே, இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி முகேஷ் அம்பானி அங்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை துவங்க முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமான நிலைய வளாகத்திற்குள் பெய்த மழை: அதிர்ச்சியடைந்த பயணிகள்