வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது
வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அசாம், பீகார், மும்பை உள்ளிட்ட பகுதிகள் மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த ஆண்டு பெய்யும் கனமழை அடுத்த ஆண்டும் பெய்யும் என்பது உறுதில்லை.
நாட்டில் மழைநீர் சேகரிப்பதற்கான போதிய ஏற்பாடுகள் இல்லை. மழைநீர் கடலில் கலந்து வீணாவது வழக்கமாக நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு பரிந்துரைந்த நதிநீர் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான நதிநீர் இணைப்பு திட்டத்திற்கான பணிகளை மத்திய அரசு அடுத்த ஒரு மாதத்திற்குள் தொடங்க உள்ளது. கனமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க நதிநீர் இணைப்பு திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.