பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை என்ற திட்டத்தை மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.
இந்த திட்டத்திற்கு 1.25 கோடி பெண்கள் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று முதல் மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெண்கள் மாநில அரசுக்கு நன்றி கூறி வருகின்றனர்.
தமிழகத்திலும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் அமல்படுத்தப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.