சபரிமலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க உடனடி முன்பதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். நாள்தோறும் முன்கூட்டிய ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முறை மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாள்தோறும் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கான எண்ணிக்கை 90 ஆயிரமாக குறைக்கப்பட்டது. ஆனாலும் உடனடி முன்பதிவு மூலமாக மக்கள் தரிசனத்திற்கு வருவதால் கூட்டம் குறையாமல் இருந்து வந்தது. அதனால் இனி நேரடி முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. தரிசனம் செய்ய வருபவர்கள் முன்கூட்டியே ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.