உத்திர பிரதேசத்தில் காவலர் குடியிருப்புகளுக்கு காவி நிற வர்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். பாஜகவை சேர்ந்த இவர் பதவியேற்றத்திலிருந்தே உத்திரபிரதேசத்தில் காவி நிறம் மேலோங்கி காணப்படுகிறது.
அரசு அலுவலங்கள், பள்ளிகள் என பல கட்டிடங்களுக்கு பாஜக பக்தாள்கள் பலர் காவி நிறத்தை பூசி அட்ராசிட்டி செய்து வருகின்றனர். இது அவர்களாக செய்கிறார்களா அல்லது மேலிடத்தின் உத்தரவா என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
கொடூரத்தின் உச்சமாய் பாஜகவை சேர்ந்த சிலர் அம்பேத்கர் சிலைக்கு காவி நிறத்தை பூசினர். இச்சம்பவம் நாடுமுழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் சிலைக்கு மீண்டும் நீல நிறம் பூசப்பட்டது. அதேபோல் சமீபத்தில் ஒரு பள்ளியின் கழிவறையிலும் காவி நிற வர்ணம் பூசப்பட்டது.
இந்நிலையில் உ.பியில் உள்ள காவலர் குடியிருப்பு ஒன்றில் காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.