ஹைதராபாத் பெண் மருத்துவர் பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சம்பந்தமாக நால்வரை கைது செய்தது போலீஸ் தரப்பு.
கைது செய்யப்பட்டவர்களிம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று விசாரணைக்காக பெண் மருத்துவரின் உடல் கண்டெக்கப்பட்ட இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தப்பிக்க முற்பட்டதால் காலை 3 மணி அளவில் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த என்கவுண்டரில் மூன்று காவல்துறையினரும் காயமடைந்து மருத்துவனமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த நால்வரும் சுட்டுக்கொள்ளப்பட்டதற்காக சைபராபாத் காவல் ஆணையர் சய்ஜனாருக்கு பொதுமக்கள் பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வாரங்கல் எஸ்.பியாக இருந்து போது ஆசிட் வீச்சு குற்றவாளிகள் இருவர் இதே போல என்கவுண்டரில் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் வட்டாரத்தில் இவர் என்கௌண்டர் போலீஸ் என்றே அழைக்கப்படுகிறாராம்.
இவரையும் இந்த என்கவுண்டர் பின்னணியில் இருந்த மற்ற காவல் அதிகாரிகளையும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகிறது. அந்த பெண் இறந்த இடத்திலேயே நால்வரை சுட்டுக்கொன்று இருப்பது சரியான தண்டனை என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.