தங்களுடைய சொத்துக் கணக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறு குஜராத் மாநில நிதித்துறைக்கு, பொது நிர்வாகத்துறை கடிதம் எழுதியுள்ளது.
குஜராத் அரசு அலுவலகங்களில் கிரேட் 1 மற்றும் கிரேட் 2 பிரிவில் வேலைபார்க்கும் 12 ஆயிரம் அதிகாரிகள் அனைவரும், 2017-18-ம் ஆண்டுக்கான அவரவர் சொத்து விவரத்தை ஏப்ரல் 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில அரசு கெடு விதித்திருந்தது. அவர்களில் இன்னும் 3 ஆயியம் பேர் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்கவில்லை.
இதனையடுத்து சொத்து விவரத்தை தாக்கல் செய்யாத அதிகாரிகளின் இந்த மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என மாநில தலைமை செயலாளர் ஜே.என்.சிங் தெரிவித்தார். இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.