தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு நிகராக அர்ச்சகர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பல்வேறு நலத் திட்டங்களை அமுல்படுத்தி வருகிறார். அந்த வகையில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து கோவில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் அதே அளவிலான சம்பள உயர்வு கோவில் அர்ச்சகர்களுக்கும் வழங்ப்பட உள்ளது. மேலும் அர்ச்சகர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 65 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. மசூதியில் உள்ள இமாம்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.