இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. சமீபத்தில் தற்போது இரண்டாவது கொரோனா அலை வேகமாகப் பரவி வந்த நிலையில் தற்போது பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கொரொனா தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் இதுவரை மொத்தம் 32.36 கோடி கொரொனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி அரசின் கீழ் மற்றும் மொத்த சமூதாயத்தினால் இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.