கொரோனா ஊரடங்குக்குப் பிறகு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 60 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்போது வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கான முன்பதிவுகள் நடந்துகொண்டு இருக்கும் நிலையில் ரயில்வே நிர்வாகம் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன் படி சீனியர் சிட்டிசன்களுக்காக வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகள் எதுவும் இப்போதைக்குக் கிடையாது என சொல்லப்படுகிறது. இதன் மூலம் தேவையற்ற பயணங்களை குறைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் ரயில் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது.