உத்தரபிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க பரம எதிரிகளாக சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால் அதற்கு பலன் கிடைக்காமல் பாஜக அபார வெற்றி பெற்றது.
சமீபத்தில் கூட சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி முடிவுக்கு வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலிலும் அக்கட்சி தனித்து போட்டியிடும் எனவும் தெரிவித்தார். இதற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தங்கள் கட்சியும், தனித்து போட்டியிடும் என்று கூறினார். இதனால் கூட்டணிக் கட்சியில் நல்ல பிணைப்பு ஏற்படாலமலேயே முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இனிமேல் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடுவதாக மாயாவதி தெரிவித்துள்ளார். இதனால் கூட்டணிக் கட்சியினர் கடும் அதிர்சி அடைந்துள்ளனர்.