பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் சரிவில் இருந்து வருவதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர்
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கடந்த வெள்ளி முதல் தற்போது மீண்டும் பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
இன்றைய பங்குச்சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் சரிவில் ஆரம்பித்து தற்போது 75 புள்ளிகள் வரை சரிந்து 58 ஆயிரத்து 970 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 565 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பங்குச் சந்தை இன்னும் சில நாட் களுக்கு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என பங்குச் சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.