குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாக பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை நியமிக்கலாம் என பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. ஆனால் இந்த வெற்றி கடும் நெருக்கடிக்கு மத்தியில், போராடி பெற்ற வெற்றி. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக குஜராத் சட்டமன்றத்தில் அமர உள்ளது.
எனவே விஜய் ரூபானிக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியை சமாளிக்கும் திறமையுடைய வேறு நபரை முதல்வராக நியமிக்கலாம் என பாஜக மேலிடம் திட்டமிட்டு வருகிறது. அந்த பட்டியலில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
குஜராத்தி மொழியை சரளமாக பேசும் திறமை, ஆங்கில அறிவு, தலைமை பண்பு போன்ற காரணங்களால் ஸ்மிருதி இரானி பரிந்துரையில் உள்ளார். ஆனால் இதனை ஸ்மிருதி மருத்துள்ளார். குஜராத் முதல்வர் தேர்வில் போட்டியாளராக தாம் இல்லை, அதேநேரத்தில் கட்சி மேலிடத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்பதாக தெரிவித்துள்ளார் அவர்.