காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் சோனியா காந்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், "ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை பெற்றிருந்தாலும், ராமர் கோயில் திறப்பு விழாவில் கார்கே மற்றும் சோனியா காந்தி பங்கேற்க மாட்டார்கள். கட்சியின் உயர்மட்டக் குழுவில் இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆதரிக்கவில்லை என்றும், இந்த முடிவு அரசியல் ரீதியாக நடுநிலை வகிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்,
ராமர் கோயில் திறப்பு விழா ஒரு முக்கியமான மத நிகழ்வு என்பதால், அதில் பங்கேற்பதன் மூலம் ஒரு சமூகத்தின் ஆதரவைப் பெற முடியும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என்றும் அவர் கூறினார்,.