இலங்கை சீதை கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து இந்தியாவிலிருந்து சீதை அம்மனுக்கு சீர்வரிசைகள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை நுவரெலியா என்ற பகுதி அருகில் சீதையை மூலவராக கொண்ட அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள ஆற்றில் தான் சீதை நீராடினார் என்றும் அதனால் தான் அந்த ஆறுக்கு சீதா ஆறு என்று பெயர் வந்தது என்றும் இந்த ஆற்றங்கரையில் உள்ள காலடி பள்ளங்கள் அனுமார் பாதம் என்று கருதப்படுகிறது.
இலங்கையில் சீதையை தேடி அனுமார் வந்தபோது சீதையை இந்த ஆற்றங்கரையில் தான் அனுமார் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சீதை கோயிலுக்கு இந்தியாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை அடுத்து இந்தியாவிலிருந்து சீதைக்கு சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டதாகவும் இந்த சீர்வரிசையை இலங்கைக்கான இந்திய தூதர் கோவில் நிர்வாகிகள் இடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.