கொரோனா வராமல் தடுக்க தாயத்து விற்பனை செய்த ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு மருந்து என உள் பிராந்தியங்களில் சில பகுதிகள் சிலர் விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் கொரோனாவை கோமியம் குணப்படுத்திவிடும் என பிரபல அமைப்பு ஒன்று கோமியம் குடிக்கும் விழா நடத்தியது. அதை தொடர்ந்து கொரோனாவை தாயத்து கட்டி குணப்படுத்தி விடலாம் என்று தாயத்து விற்பனை செய்த ஒரு நபரை போலீஸார் பிடித்துள்ளனர்.
லக்னோவில் தாயத்துகளை விற்பனை செய்த அஹமத் சித்திக் என்ற நபர் ”கொரோனாவை தடுக்க முகமூடி வாங்க முடியாதவர்கள் இந்த தாயத்தை வாங்கி கட்டிக்கொள்ளலாம். இதை கட்டினால் கொரோனா நெருங்காது” என்று கூறி தாயத்துகளை விற்றுள்ளார்.
அவரை கைது செய்த போலீஸார் விசாரித்த பிறகு எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.