நீட் தேர்வில் முறைகேடு செய்தது உண்மைதான் என மாணவர் ஒருவர் வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வில் மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் இது குறித்த வழக்கும் நடந்துவரும் நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் மாமா பொறியாளராக பணிபுரிந்து வருவதாகவும் அவர் மூலம்தான் தேர்வுக்கு முன்பாகவே விடையுடன் கூடிய வினாத்தாள் மாணவர்களுக்கு கிடைத்ததாகவும் அந்த மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மாணவர்கள் மற்றும் சிலர் மாணவர்களின் பெற்றோர்களையும் கைது செய்து வருவதாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் தான் மாணவர் ஒருவரே நீட் தேர்வு வழக்கில் முன்வந்து குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து நீட் தேர்வின் நன்பகத்தன்மை குறைந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.