விசாகப்பட்டிணம் துறைமுகம் அருகே கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் கடலில் குதித்ததால் உயிர் தப்பிக்கொண்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் துறைமுருகம் அருகே ஒரு கப்பல் நின்றிருந்தது. இந்நிலையில் இன்று மதியம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதில் இருந்த பயணிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கடலில் குதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற இந்திய கடலோர காவல்படை கப்பல் (ஐ.எஸ்.சி.ஜி.எஸ்) ராணி ராஷ்மோனி , கடலில் தத்தளித்த 28 பேரை மீட்டனர். இந்நிலையில் மாயமான ஒருவரை தேடி வருகின்றனர்.
மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளுக்கு உதவ ஐ.சி.ஜி.எஸ் சமுத்ரா பகேர்தார், ஐ.சி.ஜி ஹெலிகாப்டர் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் சி -432 ஆகியவையும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தீவிபத்துக்கான காரணம் அறியப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகிறது.