வேலையிழந்த பைஜூஸ் நிறுவனத்தின் 2500 ஊழியர்களுக்கு பிரபல நடிகர் கொடுத்த அட்வைஸ்!
சமீபத்தில் பைஜூஸ் நிறுவனம் 2500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் வேலை இழந்த ஊழியர்களுக்கு பிரபல நடிகர் ஒருவர் தனது அறிவுரையை கூறியுள்ளார்.
கூகுள் மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதால் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து செலவுகளை குறைத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பைஜூஸ் நிறுவனத்தில் இருந்து 2500 ஊழியர்கள் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி கூறியபோது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வர பிரார்த்தனை செய்கிறேன் .
சிறு மற்றும் குறு குறு தொழில் தொடங்குவது தான் ஒருவருக்கு பாதுகாப்பானது என்றும் இந்திய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு தொழில் துறையில் புதிய வாய்ப்புகளை வளர்க்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சிறு மற்றும் குறு நடுத்தர தொழில் தொடங்கினால் குறைந்த பட்சம் உயிர் பிழைக்கும் அளவிற்கு வருமானம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த அறிவுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.