தெலுங்கு திரை உலகில் அதிரடி ஹிட் படங்களைக் கொடுத்து சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மகேஷ்பாபு. இவரது வங்கிக் கணக்குகளை ஜி.எஸ்.டி துறையினர் முடக்கி வைத்துள்ளனர். அதாவது அவர் செலுத்தாத சேவை வரிகளைத் திரும்ப பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ள ஜி.எஸ்டி. துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐதராபாத் ஜிஎஸ்டி துறையினர் கூறியதாவது :
மகேஷ் பாபு கடந்த 2017 ஆம் ஆண்டுக்கான சேவை வரியை கட்டவில்லை, விளம்பர பிரதிநிதியாக குறிப்பிட்ட விளம்பரங்களில் தோன்றியது, அப்பொருளை விளம்பரம் செய்தது போன்றவற்றிற்காக இந்த வரி விதிக்கப்பட்டது.
இதற்காக மகேஷ் பாபு செலுத்தவேண்டிய தொகை ரூ.18.5 லட்சம் . இதனையடுத்து மகேஷ் பாபு ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ ஆகிய வங்கிகளில் வைத்துள்ள அவது வங்கிக் கணக்குகளில் ரூ. 73.5 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. இது மொத்த வட்டி மற்றும் அதற்காக அபராதத் தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜிஎஸ்டி துறை ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து ரூ. 42 லட்ச்த்தை மீட்டுள்ளதாகவும். மற்றொரு வங்கியான ஐசிஐசிஐ வங்கி வெள்ளிக்கிழமை பணத்தை தருவதாக கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.