இட ஒதுக்கீடு தீர்ப்பை அளித்து ஓய்வு பெறும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி!
இன்று சுப்ரீம் கோர்ட்டில் பொருளாதார நிலையில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு வெளியான நிலையில் இந்த தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகளில் ஒருவரான தலைமை நீதிபதி லலித் என்பவர் இன்று ஓய்வு பெறுகிறார்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்களின் பணி காலம் நாளையுடன் நிறைவடைகிறது என்றாலும் நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றுடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்கள் பொருளாதாரத்தின் பின் தங்கிய நிலையில் உள்ள உயர் வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று அவர் தீர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் புதிய நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் வரும் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது