நாடு முழுவதும் வன்முறை நின்றால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்புகள் உட்பட பல அரசியல் தலைவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் போலீஸாருடன் ஏற்பட்ட கைக்கலப்பில் வன்முறை வெடித்தது. மேலும் இதே போல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வன்முறைகள் வெடித்தன.
இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் “நாடு முழுவதும் வன்முறை நின்றால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளார்.