Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

உறவினர்கள் அணுகினால் ஜாமீன்: ஆந்திரா போலீசார் அறிவிப்பு

உறவினர்கள் அணுகினால் ஜாமீன்: ஆந்திரா போலீசார் அறிவிப்பு
, வெள்ளி, 2 மார்ச் 2018 (18:29 IST)
செம்மரம் கடத்த சென்றதாக ஆந்திரா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களின் உறவினர்கள் அணுகினால் ஜாமீன் வழங்கபடும் என ஆந்திரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடிக்கு லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. அதனை மடக்கி போலீசார் சோதனை செய்துள்ளனர். அந்த லாரியில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் 84 பேர் இருந்துள்ளனர். அவர்களை போலீசார் செம்மரம் கடத்த வந்ததாக கூறி கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்ட தமிழர்கள் நாங்கள் கூலி வேலை செய்யவதற்காக அந்த லாரியில் வந்ததாக கூறுகின்றனர்.
  
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களை ஆந்திர போலீசார் வட்டாட்சியரிடம் ஒப்படைக்க பட்டுள்ளதாகவும். கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் அணுகினால் ஜாமீன் வழங்கபடும் என ஆந்திரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஞ்சி மட பீடாதிபதியாக பொறுப்பேற்கும் விஜயேந்திரா்!