2023 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ்ஸின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது டாடா நிறுவனம்.
இந்தியா மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. எனவே உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை இங்கே சந்தைப்படுத்தவும் தங்கள் நிறுவனத்தை நுகர்வோரிடம் கொண்டு செல்லவும், மக்களின் கவனத்தை ஈர்க்கவும் அதிக முன்னேடுப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், மாருதி சுசூகி நிறுவனத்தில் உற்பத்தியாகும் ஒவ்வொரு கார் மாடலும் இந்திய மக்களின் வரவேற்பை பெரும். அதன்படி, 7 ஆண்டுகளாக மிகப்பெரிய வாகன உற்பதி நிறுவனமாக முதலிடத்தில் இருந்த மாருதி சுசூகியை பின்னுக்குத் தள்ளியுள்ளது டாடா நிறுவனம்.
அதாவது, இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது டாடா நிறுவனம்.
2023 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ்ஸின் சந்தை மதிப்பு ரூ.3.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் மாருதி சுசூகி நிறுவனம் சற்று சறுக்கி ரூ.3.20 லட்சம் கோடி சந்தை மதிப்பில் 2 வது இடம் பிடித்துள்ளது.