தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு நிகரான பிரம்மாண்டமான கோவில் கட்டும் பணியில் தெலுங்கானா அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஆந்திராவிலிருந்து தெலுங்கான தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது திருப்பதி திருக்கோவில் ஆந்திராவின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு நிகரான கோவிலை கட்டுவதற்கான தீவிர முயற்சிகளில் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டார்.
இதற்காக தெலுங்கானாவில் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த லட்சுமி நரசிம்மர் குடைவரை கோவிலை புனரமைக்க தெலுங்கானா அரசு முடிவெடுத்தது. இதற்காக ரூ.1,200 கோடி செலவில் கோவில் புனரமைப்பு மற்றும் பிரம்மாண்டமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மலையின் ஒரு பகுதியில் கோவில் நகரம் அமைக்கவும், அங்கு மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2019 இறுதிக்குள் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக கட்டுமான பணிகள் காலதாமதமாகியது. தற்போது கோவில் கட்டுமானம், கோவில் நகரம் அமைக்கும் பணிகளில் 80% முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.