தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவத்தில் அந்த கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி என்ற பகுதியில் தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நகுலா என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் அளித்த சித்திரவதை காரணமாகத்தான் மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என அவரது பெற்றோர்கள் குற்றச்சாட்டிய நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் கல்லூரி முதல்வர் ஆச்சாரியா, துணை முதல்வர் சிவராமகிருஷ்ணா, வார்டன் நரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் மற்றொரு முதல்வர் ஜெகன் என்பவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட மாணவர் நகுலாவை நீ வாட்ச்மேன் வேலைக்கு கூட போக முடியாது என நிர்வாக முதல்வர் திட்டியதாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது