மருத்துவரையே கைது செய்து இழுத்து சென்ற போலீசார்
இந்தியாவின் பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து சாலையில் யாரும் தேவையின்றி நடத்தக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பெண் டாக்டர் ஒருவர் தனது நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மடக்கிய போலீசார் அவர் டாக்டர் என்று தெரியாமல் 144 தடை உத்தரவையும் போது வெளியே வரக்கூடாது என்று தெரியாதா என டாக்டரிடம் ஒருமையில் பேசி உள்ளனர்
ஆனால் அவர் தான் ஒரு டாக்டர் என்றும் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருப்பதாக கூறியும் பலவந்தமாக அவரை காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர். அதன்பின் அவர் டாக்டர் என்று தெரியவந்ததும் உயரதிகாரிகளின் ஆணைக்கேற்ப அவர் விடுதலை செய்யப்பட்டார்
இருப்பினும் அந்த டாக்டர் தன்னை காவல் நிலையத்துக்கு இழுத்து வந்த போலீஸ் அதிகாரி மீது புகார் கொடுத்துள்ளார். அதன்பின்னர் உயரதிகாரிகளின் வேண்டுகோளின்படி அந்த புகாரை அவர் வாபஸ் செய்தார்
இதுகுறித்து அந்த டாக்டர் கூறியபோது ’நாடு முழுவதும் கொரோனா பரபரப்பில் இருக்கும் போது இந்த விஷயத்தை நான் இதற்கு மேல் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார் இதனை அடுத்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதப்படுகிறது