காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி மக்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
காஷ்மீர் ஸ்ரீநகரில் மௌலானா ஆசாத் சாலையில் மக்கள் அதிகம் நடமாடும் மார்க்கெட் பகுதி உள்ளது. வழக்கம்போல மக்கள் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது குறுக்கே கையெறி குண்டு ஒன்று விழுந்து வெடித்தது. உடனே மக்கள் நாலா திசைகளிலும் தெறித்து ஓடினர். குண்டு வெடித்ததால் 15 பேர் காயமுற்றனர். எனினும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரத்தில் கொதிப்பில் உள்ள சில பயங்கரவாத கும்பல் இந்த காரியத்தை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மார்க்கெட் பகுதியில் உள்ள கேமராவில் வெடிக்குண்டு வெடித்த காட்சி பதிவாகியுள்ளது. அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.