பாராளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொது சிவில் சட்டத்தை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்து மதம் சார்ந்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மையினர் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அவர்களுக்கான உரிமைகள் மற்றும் சில சிறப்பு சட்டங்களும் அமலில் உள்ளது.
இந்நிலையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்தும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டுமென மத்திய பாஜக அரசு தொடர்ந்து பேசி வந்தது.
இந்த பொதுசிவில் சட்டத்தால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடிப்படையைப் பாதிக்கும் என்றும், சிறுபான்மையினர் நலன் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படும் என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று, பாராளுமன்றத்தில், பொது சிவில் சட்டத்தை தனி நபர் மசோதாவாக பாஜக எம்பி கிரோடி பால் மீனா தாக்கல் செய்தார்.
சபா நாயகர் ஜக்தீப் தங்கர் இந்த மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். அதில், 63 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவாகவும், 23 பேர் எதிராகவும் வாக்களித்தனர். எனவே, குஜராத் தேர்தல் வெற்றியை அடுத்து, இன்று இந்த மசோதாவை மா நிலங்களவையில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.