இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் எல்லோருடைய கையிலும் செல்போன் உள்ளது. நவீனத்துடன் போட்டிபோடும் இளைஞர்கள் விபரீதங்களை உணர்வதில்லை.
அதுபோல ஒரு விபரீத சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஜெகதீஸ் படித்து முடித்துவிட்டு, அரசு தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சூளூர்பேட்டை கிராமத்தில் ஒரு பாம்பாட்டி விஷமுள்ள பாம்பை சாலையில் வைத்து வேடிக்கை காட்டியதை ஜெகதீஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.
இதனை சவலாக எண்ணிய ஜெகதீஸ் தனது தோளில் பாம்பை போட்டு செல்பி எடுக்க எண்ணி விஷப்பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டார்.
அப்போது பாம்பு அவரைக் கடித்து விட்டது .உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜெகதீஸை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீஸார் பாம்பின் பல்லைப் பிடுங்காமல் வித்தை காட்டிவந்த பாம்பாட்டியை தேடி வருகின்றனர்.